முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் ஊடகங்களுக்குத் தொிவித்துள்ளாா்.
அத்துடன், தமிழ் மக்களுக்குச் சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு இணைந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே பெரும்பான்மை இனத்தவா்களுக்கு வழங்கி, தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் அறிவிப்பின்படி 28676 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்திருந்த நிலையில், இன்றுவரைக்கும் அவர்களுக்கான காணிகள் வழங்கப்படவில்லை என துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்தார்.