”நாட்டில் விரைவில் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை பெறுவார்கள்” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அதிகாரம் தற்போது எம்வசமே காணப்படுகின்றது.
கட்சியை நாம் பலமிக்க கட்சியாக மீண்டும் கட்டியெழுப்புவோம்.எமது கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னிலையாக போவதாக எவர் கூறினாலும் அது அவர்களது உரிமையாகும். ஆனால் ஏனைய கட்சியினரின் ஒத்துழைப்பு எமக்கு தேவையில்லை.
நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபடுவதற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கியவர்களாகவே இருப்போம்.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக காணப்படுவர்” இவ்வாறு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.