இந்தியாவின் வட மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து ,கோடை வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பெரும்பாலான இடங்களில் கடுமையான வெப்ப அலை நிலவும் என்பதோடு , டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் பீகாரின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவும் எனவும், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரையிலும், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் புதன்கிழமை வரையிலும் கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிப்பு விடுக்கப்பட்டடுள்ளது.