விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரலாற்றில் முதன் முறையாக வெற்றியாளர்களுக்கு 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களைப் பரிசுத் தொகையாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் எதிர் வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் இப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 50 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசுத் தொகையானது இலங்கை மதிப்பில் சுமார் 19.25 பில்லியன் ரூபாய் ஆகும். இதேவேளை விம்பிள்டனின் மொத்தப் பரிசுத் தொகை கடந்தாண்டை விடவும் 11.9% அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.