புறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் இன்று முன்னெடுக்கப்பட்ட இருவேறு போராட்டங்களின்போது, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளால் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்புக்களை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு வாசகங்களையும் பதாகைகளை ஏந்தியும் இந்தப் போராட்டமானது மேற்கொள்ளப்பட்டது.
நாடளாவிய ரீதியாகவும் இருந்து நூற்றுக்கணக்கான வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமையால், நாடாளுமன்ற சுற்றுவட்டப்பாதை மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது பொலிஸாரின் அறிவித்தலையும் மீறி அங்கு போராட்டம் மேற்கொள்ளப்பட்டமையால், போராட்டக்காரர்கள் மீது பொல்துவ சந்தியில் வைத்து பொலிஸாரினால் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதியில் பதற்றமானதொரு நிலைமை ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் கடுமையாக பாதிகக்ப்பட்டது.
அதேநேரம், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களினால் இன்று புறக்கோட்டையில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.