இலங்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 58 ஆயிரத்து முன்னூற்று நான்கு பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்
இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே திரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது 63917 பேர் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் 2015 இல் 16184 நபர்களும் 2016 இல் நபர்களும் 2017 இல் 8881நபர்களும் , 2018 இல் 8747 நபர்களும் ,2019 இல் 7405 நபர்களும் ,2020 இல் 3154 நபர்களும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .