இலங்கை ஆசிரியர் சங்கம், எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன் உறுதியளித்தபடி தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை பொருட்படுத்தாமல் தமது கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.