அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாது கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி ஹைலகண்டி மாவட்டத்தில் நேற்று ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.