தமிழக சட்டசபை இரண்டாவது நாள் அமர்வு இன்று கூடியது.
கேள்வி நேரம் தொடங்கும் முன் அ.தி.மு.க நாடாளுமன்று உறுப்பினர்கள் கடும் குழப்பநிலையில் ஈடுபட்டிருந்தனர். மானிய கோரிக்கையை தவிர்த்துவிட்டு கள்ளச்சாராய விவகாரத்தை விவாதிக்க அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி எழுதிய கடிதங்களை காண்பித்து இருக்கையை முற்றுகையிட்டதால் சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார்.
இருப்பினும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளியேற்றுமாறு காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. மற்றும் பாம.க. உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னதாக, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதாக தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நாடாளுமன்ற உறப்பினர்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது