2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஹரின் பெர்னாண்டோ இதனைக் தெரிவித்தார்.
இதேவேளை விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் பாரிய செலவீனத்தை மேற்கொண்டுள்ளதாகவும், சர்வதேச மட்டத்திலான சாதனைகளை படைத்த 60 விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதாந்தம் 50,000 ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 850 விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சுகததாச விளையாட்டு அரங்கத்தையும் புனரமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக கெத்தாராம மைதானத்தை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்து ஒரு பில்லியன் ரூபாவை பெற்று இந்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்
அத்துடன், சுகததாச விளையாட்டு அரங்கத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டு வளாகங்களை புனரமைக்கும் வகையில் எதிர்காலத்தில் சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் விளையாட்டு விழாவை நடத்தவும் விளையாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.