வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாயார் வேலைக்குச் செல்லும் போது சிறுமியை தனது அயலவரது வீட்டில் விட்டுச் செல்வது வழமை எனவும் , இவ்வாறு விட்டுச் செல்லும் சந்தர்ப்பங்களில் அயலவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை தொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது குறித்து சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ள நிலையில், சந்தேக நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.