இலங்கை அரசானது பணவீக்கத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3% ஆக இருந்த நிலையில் அது மே 2024 இல் 0.5% ஆகக் குறைந்துள்ளது எனவும், 2024 ஏப்ரலில் 2.3% ஆக பதிவாகியிருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 2.4% ஆக சிறிதளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.