கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கென வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க உபகுழுவின் பரிந்துரைகளை அமைச்சரவையில் முன்வைத்து அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர் சேவையில் இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமைக்கு பதிலாக ஆசிரிய தொழிற்சங்கங்களைத் தெளிவுபடுத்தி, அரச சேவை ஆணைக்குழுவிடம் முன்வைத்த யோசனையை ஆராய்ந்து அதனை கல்வியமைச்சில் முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை அத்தியாவசியப் பயிற்சி புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையினை குறைப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.