கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டு குறித்த அழைப்பபாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.