வரிகளை உயர்த்தும் திட்டத்திற்கு எதிராக கென்யாவில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
அதன்படி கென்ய தலைநகர் நைரோபியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.