எதிர்காலத்தில் உலோகங்களை ஏற்றுமதி செய்பவர்கள் கைத்தொழில் அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உலோகம் தொடர்பான தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
உலோகம், இரும்பு, அது தொடர்பான உபகரணங்கள் மற்றும் பழைய பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை உலோக கழிவுகள், இரும்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் செம்பு, பித்தளை, அலுமினியம், சீனாவேர் மற்றும் வெள்ளை இரும்பு போன்ற குப்பை பொருட்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதனால் ஏற்பட்ட நிதி இழப்புகள் குறித்தும் அமைச்சர் சம்பந்தப்பட்ட கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்
அங்கு, அனுமதிக்கப்பட்டுள்ள உலோகம் தொடர்பான ஏற்றுமதிகள் மற்றும் ஏற்றுமதி நிலைமைகளுக்கு ஏற்ற பொருட்களை அடையாளம் காணும் வகையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அனைத்து சட்டவிரோத மீள் ஏற்றுமதிகளும் நிறுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.