நேபாளத்தில் பருவபெயர்ச்சி காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நிலச்சரிவு , மின்னல் தாக்கம் என மக்கள் பல இயற்கை இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நிலச்சரிவில் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் ஏற்படும் நிலச்சரிவுகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் பல லட்சம் பேர் பருவகாலத்தின்போது ஏற்படும் மழை தொடர்பான சம்பவங்களால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.