”சிறு சதவீத்தால் எரிபொருள் விலை குறைக்கப்படுமாயின் நாம் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தயாரில்லை” என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கானத் தீர்மானங்கள் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கெமுனு விஜேரத்ன” எரிபொருள் விலையில் இன்று மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜுலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டண விபரங்கள் குறித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று அறிவித்திருக்க வேண்டும்.
எனினும், போக்குவரத்து துறையினருக்கு இதுவரையில் எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை.
இன்று எரிபொருள் விலை குறைக்கப்படுமாயின் அதன் பயன்பாட்டை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
எவ்வாறாயினும், எரிபொருளின் விலை போதிய அளவு குறைக்கப்படவேண்டும். அவ்வாறு குறைத்தால்தான் எம்மால் பஸ் கட்டணத்தையும் யோதிய அளவு குறைக்க முடியும். 2 ரூபாவினால் குறைப்பதால் அதனை பலன் மக்களை சென்றடையாது. குறிப்பாக சிறு சதவீத்தால் எரிபொருள் விலை குறைக்கப்படுமாயின்
நாம் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தயாரில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.