கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர்.
தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்களைகளுக்கு சர்வதேச நீதி கோரி, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக இன்று காலை 10மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக சரியான பொது வேட்பாளரை நியமித்தால் அவருக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.