ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், கட்சி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்சவையும் நியமிக்கும் என உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் காரியவசம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் என மீண்டும் வலியுறுத்திய சாகர காரியவசம், ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தால் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
மேலும் எங்கள் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை, அவர்கள் நிச்சயமாக பொதுஜன பெரமுன சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம் என்றும் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.