காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அதன்படி அகமதாபாத், பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் காற்றின் தரம் உலக சுகாதார அமைப்பின் தரத்தை விட அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.