கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் இந்த கழிவுகள் கொட்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளது.
இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் பளை பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற மக்கள் பளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் வேண்டுகோள் தொடர்பான மகஜரும் இதன்போது கையளிக்கப்பட்டது.