எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ட்ரம்புடனான விவாதத்தின்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததனால் தான் சோர்ந் போயிருந்ததாக தெரவித்துள்ள ஜோ பைடன், நேரடி விவாதத்தில் சரியாக செயல்படாததற்கு தானே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக கட்சியில் தனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், பெரும்பாலான தலைவர்கள் ஆதரவாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகுமாறு கடவுள் கூறினால் மட்டுமே தான் வெளியேறுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்னரான நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 26 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி ஜோ பைடனும், முன்னாள் டொனால்டு ட்ரம்ப்பும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில், ட்ரம்ப் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது, ஜோ பைடன் சற்று தடுமாறியிருந்தார். 81 வயதான அவரால் சரியான பதிவை வழங்க முடியாமற் போனது.
இந்நிலையில், அவரின் தடுமாற்றம் பல சர்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது தான் எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.