சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கே மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொிவித்துள்ளாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித்த அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வின் 27 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு களுத்துறையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்தத் தொிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
”நாடு நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பத்தில் நாட்டை பொறுப்பேற்க தயங்கியவர்கள் இன்று நாட்டில் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.
நெருக்கடி ஏற்பட்ட போதுந நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியாதவர்கள் இன்று மக்கள் மத்தியில் சென்று தங்களுக்கு தேர்தலில் ஆதரவளிக்குமாறு கோருகின்றனர்.
நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு இட்டுச் செல்வதே அவர்களின் நோக்கமாகும்.
எனவே சவாலை ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தலைவருக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டாா்.