அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் குறித்த விலைகுறைப்பு அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பயறு ஒரு கிலோகிராமின் விலை 998 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமின் விலை 205 ரூபாவாகவும், சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 375 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோகிராமின் விலை 263 ரூபாவாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இதேவேளை முட்டை மீதான வற் வரியை அரசாங்கம் நடைமுறைப்படுத்தினால் உள்ளூர் முட்டைகளின் விலை அதிகரிக்குமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ரட்ணசிறி அழககோன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.