பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இடையில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளமாகத் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.