ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையமுடியாதென நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ பிரிவெனாவில் இடம்பெற்ற அமரபுர மகா நிக்காய – ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44ஆவது உபசம்பதா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ
ஒழுக்கம் இல்லாவிட்டால் சாசனம் அழிந்துவிடும் என்பதை போன்று ஒழுக்கம் இல்லாத நாடும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் என்று குறிப்பிட்டார்.
புத்த தர்மத்தின் முன்னுதாரணம் நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக அவசியமானதாக காணப்படுகிறது.
இலங்கையில் உபசம்பதா இல்லாத காலத்தில், தாய்லாந்தில் இருந்து அதனை கொண்டு வருவதற்காக எமது பிக்குகள் மூன்று தடவை தாய்லாந்து செல்ல வேண்டியிருந்தது.
பல இன்னல்களுக்கு மத்தியில் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லப்பட்டிருந்த இந்த உபசம்பதா முறைமையை பாதுகாக்க மகா சங்கத்தினர் மிகலும் பாடுபட்டிருந்தனர்.