ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க இன்று பிற்பகல் சட்டமா அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்படி அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நாட்டின் 49வது சட்டமா அதிபராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இதேவேளை நேற்று கூடிய அரசியலமைப்பு சபை, சட்டமா அதிபராக பரிந்த ரணசிங்கவை நியமிப்பதற்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருந்தது.
ஜனாதிபதியின் சட்டத்தரணி பரீந்த ரணசிங்க ஏற்கனவே பதில் சட்டமா அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.