வயோதிப பெண்ணொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் வசிக்கும் வயோதிப பெண்ணொருவர் தனது மகனின் மனைவியால் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பொதுமக்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் தாக்குதல் மேற்கொண்ட பெண் விசாரணைகளை பின்னர் சாவகச்சேரி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்