ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு எவரேனும் இடையூறு வினைவிப்பார்களாயின் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினா் வஜிர அபேவா்தன தொிவித்துள்ளாா்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னா் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும். இந்த தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க வரலாற்று வெற்றியை பதிவு செய்வார்.
கட்சி வேறுபாடின்றி தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு பலர் எதிர்ப்பார்த்துள்ளனர்.
வீழ்ச்சி பாதையில் இருந்து வெகு குறுகிய காலத்திலேயே நாட்டை மீட்டெடுத்தவர் தற்போதைய ஜனாதிபதி.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின் ஊடாக நாட்டில் இன்று பொருளாதார திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்றதன் காரணமாகவே வெகு விரைவாக வீழ்ச்சிப்பதையில் இருந்து மீண்டெழ முடிந்தது.
எனவே ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு எவரேனும் இடையூறு வினைவிப்பார்களாயின் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும்.
ஏனெனில் நாட்டில் ஆட்சியமைக்க நினைக்கும் பலரிடம் பொருளாதார வேலைத்திட்டங்கள் கிடையாது” என நாடாளுமன்ற உறுப்பினா் வஜிர அபேவா்தன மேலும் குறிப்பிட்டாா்.