நீட் தேர்விற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றமைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ”நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது எனவும் இத் தேர்வினால் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொது மருத்துவ கல்வி முறையை கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது எனவும், இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விரைவில் மு.க ஸ்டாலினைச் சந்திக்கத் தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.