நீலகிரி மஹா சேயாவில் புனித நினைவுச் சின்னங்களை வைக்கும் மாபெரும் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) மற்றும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரித் வழிபாடுகளுடன் புனித நினைவுசின்னக்கள் வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதான பௌத்த மதகுருமார்கள் உற்பட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ் மற்றும் மஹா சங்கரத்ன உட்பட பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.