பிரைட் ரைஸ், கொத்து, அரிசி ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாகஅகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தத்தின் அடிப்படையில் உணவின் விலையை குறைக்க அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை திருத்தப்பட்ட இரண்டாவது மின் கட்டண திருத்த மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது
அதன்படி இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் 22.5% என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
இதன்படி, 30-60 வீட்டு மின் அலகு 20 ரூபாவில் இருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
30 அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோரின் மாதாந்த மின் கட்டணத்தின் பெறுமதி 390 ரூபாவிலிருந்து 280 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் ,60 யூனிட் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்திர மின் கட்டணம் 1,140 ரூபாயில் இருந்து 700 ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் குறைக்கப்பட்டு ஒரு யூனிட்டின் விலை 6 ரூபாய் முதல் 90 யூனிட் வரை மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.