கென்யாவின் நைரோபிக்கு அருகிலுள்ள கல்குவாரி ஒன்றில் அதிகளவான பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
இதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் தெரிவிக்கையில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொன்று சடலங்களை அந்த இடத்தில் வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்களுடையது என நம்பப்படும் பல்வேறு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.