நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றவுள்ளது
அதன்படி தேர்தல் தொடர்பான பல அடிப்படை ஆவணங்கள் அச்சடிக்க ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை 10 பில்லியன் ரூபாவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த பணத்தை வழங்குவது மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணத்தை திறைசேரியில் இருந்து உரிய நேரத்தில் விடுவிப்பது தொடர்பிலான விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட உள்ளன.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்திக்கவுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் குழு நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.