”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ட்ரம்பின் நிலை ஏற்படலாம்” என்பதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னனியின் அழைப்பாளர் வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியினால் கண்டியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதே நிலைமை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ஏற்படலாம். எனவே அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்.
மேலும் அனுர குமார திஸாநாயக்க பொதுவெளியில் தோன்றாமல் உரைகளை ஆற்றவேண்டும். இந்த ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக எந்த இரக்கமற்ற செயல்களையும் செய்வார்கள் என்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் ” இவ்வாறு வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.