அரபிக்கடலில் கடந்த 15 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது குறித்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கையர்கள் என 16 பணியாளர்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பணியாளர்களைத் தேடும் பணியில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 7 பேரைத் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் இந்த எரிபொருள் கப்பல் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.