அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ்,
அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார்.