ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயதுச் சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி நேற்றைய தினம் அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணறொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் தாயாரே சிறுமியைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது