இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க நிரோஷனவின் கொலைவழக்கில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது சவாலான விடயமாக உள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மிக்க நிரோஷன கடந்த செவ்வாய்க்கிழமை (16) அம்பலாங்கொடை கந்த பகுதியில் அவரது வீட்டிற்கு முன்பாக 3 அடங்கிய குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் அவர் கொல்லப்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.