கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதன்போது ” கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்றும், ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கபட்டுள்ளதா என்று தெரிந்த பின்பே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.