ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினரைப் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்போது ”மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அத்துடன் ”இது தொடர்பாக எதிர்மறையான மற்றும் ஆதாரமற்ற போலியான அறிக்கைகளை வெளியிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிஞர்களை பொதுவான மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் நிதி இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.