நாடளாவிய ரீதியில் சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை அணுகுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம், பேருவளை ஹல்கதவில மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டின் மனித வளத்தையும் மூலதன பாய்ச்சலையும் ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பிரபஞ்சம் திட்டமானது ஸ்மார்ட் குடிமக்களை உருவாக்குவதற்கான முதற் படி எனவும், இதன் மூலம் ஸ்மார்ட் மாணவர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை டிஜிட்டல் கல்வி மற்றும் டிஜிட்டல் எழுத்தறிவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.