காலி நகருக்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த கார் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 53 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதோடு , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.















