தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய
கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் இன்றைய தினம் காலை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்களிடம் குறித்த கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை. அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். இவ்வாறு பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றமையால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என தெரிவித்துள்ள மீனவ அமைப்பு அனைத்து மாவட்டங்களிலும் யைழுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தது. இந்நிலையில், முன்னெடுக்கப்படும் குறித்த கையெழுத்துப் போராட்டம் இன்று (20) மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்,இளைஞர்,யுவதிகளும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.