இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
”பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மூன்றாவது தவணை விடுவிப்பு தொடர்பான இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்த பின்னரே நாம் மூன்றாவது மீளாய்வுக்குத் தயாராக வேண்டும்.
எனவே மூன்றாவது மீளாய்வு தொடர்பான தூதுக்குழுக் கலந்துரையாடல் நிமித்தமான விஜயமல்ல, மாறாக நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் நோக்கமாகும்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 5.1சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது.
வருடத்தின் நிறைவில் 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை பொருளாதார வளர்;ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது” என மேலும் தொிவித்தாா்.