நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் எல்லையற்ற அதிகாரத்தை குறைத்து, ஜனாதிபதி பதவிக் காலத்தை 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைப்பதே 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் உள்ளடக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
“19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இன்று விமர்சிக்கும் பலர் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மறந்து செயற்படுகின்றனர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நான் நன்கு அறிவேன். ஏனெனில் நான் பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு கைச்சாத்திட்ட உடன்படிக்கையில் மைத்ரிபால சிறிசேனவின் ஆறுவருட பதவிக்காலத்தை 5 வருடமாக குறைப்பது அல்ல.
பலர் இன்று 18வது திருத்தத்தை மறந்துவிட்டு 19வது திருத்தத்தை பற்றியே பேசுகின்றனர்.
எல்லையற்ற ஒற்றையாட்சியின் 18 அதிகாரங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும், ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றே மகிந்த ராஜபக்ச ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
19 ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அரசியலமைப்பில் ஜனாதிபதியின் 6 பதவிக்கால வரம்பு நீக்கப்பட்டதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
6 வருடங்களாக காணப்படும் ஜனாதிபதியின் பதிவிக்காலம் 5 ஆக வரையறுக்கப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தொிவித்தாா்.