பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்டவே அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
“இலங்கைக்காக வௌிநாடுகளில் பாடுபடுவோரின் குடும்பங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை செயற்படுத்துகிறது.
இந்த பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் உங்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவற்றோடு ‘அஸ்வெசும’, ‘உறுமய’ போன்ற வேலைத் திட்டங்களின் கீழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்த நிவாரணங்களை கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.