ஏமன் துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்குப் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹவுதிகள் கட்டுப்பாட்டிலுள்ள ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் சமீபத்தில் ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனல்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், ‘எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிக்கையில், இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹவுதி பயங்கரவாதிகள் இஸ்ரேலைத் தாக்கவும், அரபு நாடுகளைத் தாக்கவும் ஈரான் ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.