தற்போது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அதற்கு நாம் அனைவரும் இணைந்து ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தொிவித்தாா்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற “விகமனிக ஹரசர” நிகழ்வில் உரையாற்றும் போதே அவா் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளிநாட்டு பணியாளர்களின் உழைப்பை நாட்டுக்கு தேவையான வகையில் பயன்படுத்தியது.
இரண்டு வருடங்களாக நீடித்து வந்த கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க இந்த வௌிநாட்டு பணியாளர்கள் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் இரு பக்கங்களும் பற்றி எரியும் விளக்கை போன்றதாகவே நாட்டின் நிலைமை இருந்தது.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் நம்பிக்கை கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு பணத்தை அனுப்ப முன்வந்தனர்.
தற்போது நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது. தொடர்ந்தும் அதனை வலுவாக செயற்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.